ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஶ்ரீ ஆதி சங்கராசார்ய மந்திர், நொய்டா
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடமானது அத்வைத தத்துவமும் சமூக சேவையும் நம் பாரத நாட்டில் என்றும் நிலைத்திருக்கும் வன்னம் நம் நாடு முழுவதும் பரவி கொண்டு வருகிறது. நொய்டாவில் வாழும் பக்தர்களின் பல நாள் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ சங்கர மடம் ஸ்ரீ ஆதி சங்கராசார்ய மந்திரை உத்தர் ப்ரதேச மாநிலத்தில் A-52, நொய்டா தாத்ரி சாலை ( HP பெட்ரோல் பன்க் எதிரில்) , கிரீன் வேலி சௌக் அருகில், செக்டர் - 42, நொய்டா - 201304 வில் அமைத்து இருக்கிறது. பிப்ரவரி 2007ல் கோவில் சம்ப்ரோக்ஷனம் நடைப்பெற்றது.
திருகோவிலின் மூர்த்திகள்:
இந்த கோயிலின் மூல மூர்த்தி ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர ஸ்வாமி. ஸ்ரீ சுந்தர விநாயகரும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சன்னதிகளும் உள்ளது. ஜனவரி 2008 ல் நவகிரஹங்களும் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது. அனைத்து மூர்த்திகளுக்கும் வழக்கமான பூஜைகள் நடைபெரும். இதை தவிர ஒரு தனி சிவலிங்கமும் பக்தர்கள் பூஜை செய்வதர்கென்று அமைக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
திருகோயிலின் செயற்பாடுகள்:
ஆன்மீகத்தை வளர்க்கும் திருகோயிலாக மட்டும் செயல்படாது, கீழ் கண்ட செயல்களையும் செய்து வருகிறது இந்த திருகோயில்.
1. டில்லி வழியாக பயணித்து வரும் யாத்ரீகளுக்கு சிறிது நேரம் தங்கும் இடமாக இயங்கி வருகிறது.
2. ஹோமங்கள் மேற்கொள்ள வசதியாக அமைந்துள்ளது.
3. உபநயனங்கள், சஷ்டியப்தபூர்த்தி முதலிய சம்ஸ்காரங்களும் இங்கு நிகழும்.
திருகோயிலின் நேரம்:
காலை 7 முதல் 11 மணி வரை
மாலை 5 முதல் 8 மணி வரை
மாதாந்திர சிறப்பு பூஜைகள்.
- ப்ரதோஷம்
- சங்கடஹர சதுர்த்தி
- சங்கர ஜெயந்தி
- ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் ஜெயந்திகள்.
- மஹாசிவராத்திரி
- பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகளின் ஆராதனை பூஜா.
- அன்னபிஷேகம்.
.jpg)
.jpg)